மரணத்தின் குழந்தை
போலும்
துயரங்கள்.
முதிராத சிறுமிக்கு
முதல் உதிரப்போக்குபோல
தொடக்கத்தில் பயமேற்படுத்தின
துயரங்கள்.
இப்போது
துயரமற்ற கணங்கள்
பீதி ஏற்படுத்துவதாய் இருக்கின்றன.
தொடக்கமும்
முடிவற்றதுமான
புதிர் வழித்தடங்களைப் போல
இருக்கின்றன
துயரத்தின் பாதைகள்.
கடந்துபோன துயரங்கள் அனைத்தும்
பிறருக்கானவை போலும்
ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றன.
தவிர்க்க முடியாதவைகளின் பட்டியலில்
துயரங்கள்
பிரதான இடம் வகிக்கின்றன.
துயரமெழுதும் குறிப்புக்களில்
எவர் பெயரும் விடுபடுவதே இல்லை.
துயரத்தின் சாயல் படியாத
முகங்கள்
முகமூடி தரித்தவை.
துயரத்திற்கான
காரணங்களைப் பொறுத்து
சில கணங்களில் அவை
விரும்பத்தக்கதாயும் இருக்கின்றன.
துயரங்கள் நிதர்சனமானவை
முடிவற்றவையும் கூட....
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
ரொம்ப துயரத்தைக் கொட்டியிருக்கீங்க. ;-) கொஞ்சம் உற்சாகத்துடன் சந்தோஷமாக அடுத்த பதிவு அமையட்டும்.
நன்றி ஜெஸிலா.
Post a Comment